சரத்பவாரின் மகளுக்கு மத்திய மந்திரி பதவி அளிக்க மோடி முன்வந்தார் சிவசேனா பரபரப்பு தகவல்

சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேக்கு மத்திய மந்திரி பதவி அளிக்க பிரதமர் மோடி முன்வந்ததாக சிவசேனா கட்சி பரபரப்பு தகவல் வெளியிட்டது.

Update: 2017-09-11 22:17 GMT
மும்பை, 

சிவசேனா பத்திரிகையான ‘சாம்னா’வில், அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் எம்.பி.யின் கையெழுத்துடன் நேற்று வெளியான தலையங்கம் வருமாறு:-

சுப்ரியா சுலேக்கு மந்திரி பதவி

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நான் சந்தித்து கொண்டபோது, நீங்கள் மோடி தலைமையிலான மந்திரிசபையில் சேர போவதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே? என்று கேட்டேன். அதில் உண்மை இல்லை என்றும், இதுபோன்ற தகவல்கள் முட்டாள்தனத்தின் உச்சகட்டம் என்றும் சரத்பவார் என்னிடம் கூறினார்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற வதந்திகள் பரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் பிரதமர் மோடி ஒருமுறை அவரது மகள் சுப்ரியா சுலேக்கு கேபினட் அந்தஸ்திலான மத்திய மந்திரி பதவி அளிக்க முன்வந்ததாகவும் குறிப்பிட்டார்.

சிவசேனா கவலைப்படாது

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் தொடர்பில் இருக்கிறார்கள். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மந்திரிசபையில் இணைய தேசியவாத காங்கிரஸ் முயற்சி எடுத்தாலும் சரி, அல்லது அக்கட்சி தலைவர்களை முதல்-மந்திரி ரகசியமாக சந்தித்து பேசினாலும் சரி, அதற்காக சிவசேனா கவலைப்படாது.

அனைத்து தரப்பினரையும் கட்சியில் சேர்த்து, காங்கிரசின் நவீன அவதாரமாக பாரதீய ஜனதா மாறிவிட்டது.

இவ்வாறு அதில் சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார். 

மேலும் செய்திகள்