மதுபான பார் உரிமையாளரை துப்பாக்கியால் மிரட்டிய அண்ணன்-தம்பி பிடிபட்டனர்

மதுபான பார் உரிமையாளரை துப்பாக்கியால் மிரட்டிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-11 22:14 GMT
மும்பை,

மும்பை பாந்திரா- குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் பாவிக்கான் என்பவர் மதுபான பார் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் பார் பூட்டப்பட்டு இருந்தது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த அங்கத் செட்டி(வயது21) என்ற வாலிபர் பாருக்கு வந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்த பாவிக்கானிடம் பாரை உடனடியாக திறக்கும்படி சண்டையிட்டார். பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு அந்த வாலிபர் தனது அண்ணன் குவார்(24) என்பவருடன் வந்தார்.

அண்ணன், தம்பி கைது

பின்னர் இருவரும் சேர்ந்து பாரை திறக்குமாறு கூறி பாவிக்கானிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாவிக்கானின் தலையில் வைத்து மிரட்டி இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பி இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்