திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சாவு

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பால் அளவையாளர் கிருஷ்ணன்.

Update: 2017-09-11 22:45 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பட்டரைபெரும்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது58). இவர் ஓய்வு பெற்ற அரசு பால் அளவையாளர் ஆவார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனில்லாமல் கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அந்த பகுதியை சேர்ந்த 52 சிறுவர்– சிறுமியர்கள் உள்பட 128 பேர் மர்ம காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 18 பேர் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்