மனைவி, கள்ளக்காதலனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

மனைவி, கள்ளக்காதலனை குத்திக்கொலை செய்தவருக்கு கீழ் கோர்ட்டு அளித்த ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

Update: 2017-09-11 22:10 GMT
மும்பை,

மும்பை யாரிரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தவர் இப்ரார் சபி (வயது38). முடிதிருத்தம் செய்பவர். இவர், கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் இவரது மனைவி வேறு ஒரு வாலிபருடன் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியையும், கள்ளக்காதலனையும் சரமாரியாக குத்திக்கொலை செய்தார்.

ஐகோர்ட்டு உறுதி செய்தது

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெர்சோவா போலீசார் ரத்தம் படிந்த கத்தி மற்றும் ஆடையுடன் இப்ரார் சபியை கைது செய்தனர். பின்னர் அவர் மீது மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணையின் போது இப்ரார் சபி மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த கோர்ட்டு இப்ரார் சபிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

இந்த தண்டனையை எதிர்த்து இப்ரார் சபி மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்ததோடு, செசன்சு கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்தது. 

மேலும் செய்திகள்