மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு

மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது என்று அமைச்சர் நமச்சிவாயம் குற்றஞ்சாட்டினார்.

Update: 2017-09-12 00:00 GMT

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் கட்சி தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மக்கள் விரோத மோடி தலைமையிலான மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கின்ற வகையிலும், கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சீர்குலைக்கும் எண்ணத்துடன் சர்வாதிகாரமாக நீட் தேர்வினை அறிவித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு குந்தகம் விளைவித்து கொண்டிருக்கிறது.

மாணவ சமுதாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற நீட் தேர்வினை முழுமையாக ரத்து செய்யக்கோரியும், சமூக நீதியையும் இடஒதுக்கீட்டு கொள்கையையும் குழிதோண்டி புதைக்கின்ற ஜனநாயக விரோத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மக்கள் நலன் மறந்த மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் புதுவை பி.எஸ்.என்.எல். தலைமை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாநில சுயாட்சியையும், மாணவர்களின் உரிமைகளையும் வென்றெடுக்க கூட்டணி கட்சிகள் பங்கேற்க இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் அனைத்து பிரிவுகளின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளும் திரளாக பங்கேற்க வேண்டுமென்று புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்