கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட பெண்கள்
குடிநீர் கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் மக்கள் குறைதீர்க்கும் நாளில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட அரியப்பபுரத்தை அடுத்த சிவசைலனூர் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் ஊர் மக்கள் சார்பில் கலெக்டரிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், “எங்கள் ஊரில் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம பஞ்சாயத்தில் நீர் ஆதாரங்கள் இல்லை. கடந்த 40 நாட்களுக்கு முன்பு வரை தாமிரபரணி தண்ணீர் மட்டும் கிடைத்து வந்தது. தற்போது அந்த தண்ணீரும் வருவது இல்லை. எங்கள் ஊருக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
களக்காடு அருகே உள்ள நாகன்குளம் கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் சரிவர இல்லை. எனவே தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
குடிநீர்தேக்க தொட்டி
அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “ஆலங்குளம் பஞ்சாயத்து யூனியன் கடங்கனேரி அருகே உள்ள வெங்கடேசுவரபுரத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்த தொட்டி தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அந்த குடிநீர்தேக்க தொட்டியை சீரமைத்து தர வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
மீண்டும் வேலை
பாப்பாக்குடி யூனியன் மைலப்பபுரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரை சேர்ந்தவர்கள் ஏற்கனவே மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தனர். தற்போது அந்த வேலை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் மீண்டும் வேலை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை மாநகராட்சி 28-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.ஏ.நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. இதுவரை அந்த குழியில் குடிநீர் குழாய்கள் பதிக்கவில்லை. அங்கு குடிநீர் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்க மானூர் ஒன்றிய செயலாளர் ஆபிரகாம் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “மானூர் பஞ்சாயத்து யூனியன் கானார்பட்டியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். அந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்களும் வெளியூர்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று வருகிறார்கள். எனவே கானர்பட்டி விலக்கில் தனியார் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவரிசை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வரும் போது மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். எனவே அவர்கள் நலன் கருதி கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தனிவரிசை அமைக்கப்பட்டது. அதன்படி இந்த வாரமும் மாற்றுத்திறனாளிகள் தனிவரிசையில் மனு கொடுக்க காத்திருந்தனர். அவர்களிடம் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று மனுக்களை வாங்கினார். பின்னர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.