உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி இல்லை ஜி.கே.வாசன் பேட்டி
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று திருவாரூரில் ஜி.கே.வாசன் கூறினார்.
திருவாரூர்,
திருவாரூரில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட த.மா.கா. கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. எனவே தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பு அணை கட்டி நீரை சேமிக்க வேண்டும். ஆறு, குளம், வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும். மழை வெள்ள பாதிப்புகளை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு எடுத்திட வேண்டும்.
கூட்டணி இல்லை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தை சுமுகமாக முடித்திட முதல்-அமைச்சர் உரிய பேச்சுவார்்த்தை நடத்த வேண்டும். அதைவிட்டு நோட்டீஸ் அனுப்புவது, அதிகாரிகளை கொண்டு மிரட்டுவதை தவிர்க்க வேண்டும். த.மா.கா சார்பில் நீட் தேர்விற்காக பயிற்சி மையத்தை முதன் முதலில் திருச்செங்கோட்டில் தொடங்கி உள்ளோம். இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க. கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தனித்தன்மையுடன் மக்களை சந்திப்போம். தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுகின்ற வகையில் நடந்து கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், சுதாகர் மூப்பனார், மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், மாவட்ட துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்லதுரை, பாண்டியன், மாநகர தலைவர் கார்்த்திகேயன் உள்பட பலர் உடனிருந்தனர்.