ராணிப்பேட்டையில் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ராணிப்பேட்டையில் தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Update: 2017-09-11 22:45 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

சித்தூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட தனியார் பஸ், ராணிப்பேட்டை அருகே நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. ஆற்காட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் தனியார் பஸ் எதிரே வந்தது. காரை கூட்ரோடு அருகே 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் பஸ்சுக்குள்ளேயே பயணிகள் அலறினர். இந்த விபத்தில் பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. நல்ல வேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும் சித்தூர்- சென்னை சாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்