ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
பென்னாகரம்,
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நேற்று அதிகாலை 3 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் நடைபாதையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் மூடப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது.
அருவியில் குளிக்க தடை
ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று காலை 8 மணி அளவில் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 11-வது நாளாக நீடித்தது. ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் நுழைவுவாயில் பகுதியில் நின்று பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை கண்டு ரசித்தனர். போலீசார், ஊர்காவல் படையினர் காவிரி கரையோரம் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.