ரிஷிவந்தியம் அருகே பிளஸ்–1 மாணவர், வி‌ஷம் குடித்து தற்கொலை, போலீஸ் விசாரணை

ரிஷிவந்தியம் அருகே பிளஸ்–1 மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2017-09-11 22:00 GMT

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சக்திவேல் (வயது 18). அதேஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தார். சம்பவத்தன்று சக்திவேல் வீட்டில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைபார்த்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு மாணவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து சாமிநாதன் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஞானகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் உடல்நலக்கோளாறால் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்