எய்ம்ஸ் மையத்தில் வேலைவாய்ப்பு
எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 305 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
அகில இந்திய அறிவியல் மருத்துவ மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் செயல்படும் எய்ம்ஸ் மையத்தில் அலுவலக உதவியாளர், ஸ்டாப் நர்ஸ், தொழில்நுட்ப உதவியாளர், ஹாஸ்பிடல் அட்டன்ட் , ஸ்டோர் கீப்பர் கம் கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 305 பேர் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்க்கலாம்...
வயது வரம்பு:
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி உள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி:
பி.எஸ்சி. நர்சிங், 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்பு, பி.எஸ்சி. மெடிக்கல் லேப் டெக்னாலஜி, டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி மற்றும் இதர அறிவியல், கலை பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கும் பணி உள்ளது. சில பணிகளுக்கு குறிப்பிட்ட பணி அனுபவம் தகுதியாக கோரப்பட்டுள்ளது.
கட்டணம்.
குரூப்-பி பணிகளுக்கு ரூ.3 ஆயிரமும், குரூப்-சி பணிகளுக்கு ரூ.2 ஆயிரமும், கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் அனைத்து பணிகளுக்கும் ரு.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
தேர்வுசெய்யும் முறை:.
எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 16-10-2017-ந் தேதி.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsrishikesh.edu.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.