மாநகராட்சிகளில் மேயருக்கு நேரடி தேர்தல் முதல்–மந்திரி தகவல்
மாநகராட்சி மேயரை மக்களே தேர்ந்தெடுக்கும் வகையில் நேரடி தேர்தல் நடத்தப்படும் என முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்த நிலையில் மாநகராட்சி மேயர்களையும் தேர்தல் மூலம் மக்களே தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:–
மேயரை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தல் வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாங்கள் சமீபத்தில் தான் கிராம பஞ்சாயத்து மற்றும் நகராட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்க நேரடி தேர்தலுக்கு நடவடிக்கை எடுத்தோம்.மாநகராட்சி தேர்தலில் இதை நடைமுறைப்படுத்துவதில் என்ன பிரச்சினை என்றால் ஏற்கனவே 90 சதவீத தேர்தல் முடிந்துவிட்டது. இனி 5 ஆண்டுகள் கழித்தே அடுத்த தேர்தல் வரும்.
நமக்கு 2 முதல் 4 மாநகராட்சி தேர்தல்களே மீதம் உள்ளன. ஆனால் சிறிய நகரங்களில் உள்ள 3–ம் மற்றும் 4–ம் தர மாநகராட்சிகளில் நேரடி மேயர் தேர்தல் நடத்துவது குறித்து நிச்சயமாக ஆலோசனை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பையில் உள்ள 25 மாநகராட்சிகளில் மும்பை, நாக்பூர், புனே, தானே, பிம்பிரி– சிஞ்ச்வாட் தவிர மீதம் உள்ள மற்ற 21 மாநகராட்சிகளும் 3–ம் மற்றும் 4–ம் தர மாநகராட்சிகளே என்பது குறிப்பிடத்தக்கது.