டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி பலி
ராசிபுரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வடுகம் கிராமம் அருகேயுள்ள கைலாசம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன். இவர் ராசிபுரம் பவர்ஹவுஸ் அருகே சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், தீபனா (வயது 9) என்ற மகளும், பிரவீன் (8) என்ற மகனும் இருந்தனர். இதில் இவரது மகள் தீபனா வடுகம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவி தீபனா கடந்த சில தினங்களாக தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மல்லூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிறுமி தீபனாவை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
அதன் பின்னர் மேல்சிகிச்சைக்காக நேற்று முன்தினம் டாக்டர்கள் அறிவுரைப்படி மாணவி தீபனாவை அவரது பெற்றோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பிற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
ஆனால் தீபனா நேற்று முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். டெங்கு காய்ச்சலால் மாணவி தீபனா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.