100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்

துறையூர்,
துறையூர் ஊராட்சி ஒன்றியம் பொன்னுசங்கம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொன்னுசங்கம்பட்டி, தேவரப்பட்டி, கல்லிக்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகிறார்கள். வாரம் ஒரு முறை என 3 கிராம மக்களுக்கும் வேலை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது பொன்னுசங்கம்பட்டி கிராம மக்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மழை பெய்ததால், அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், தொடர்ந்து வேலை வழங்க கோரி துறையூர்-முசிறி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த துறையூர் ஒன்றிய ஆணையர் பழனியப்பன், தாசில்தார் சந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது, தொடர்ந்து வேலை தருவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.