கம்யூனிஸ்டு நிர்வாகி கொலையில் 6 பேர் கைது
அருப்புக்கோட்டை அருகே இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ்(வயது 45). இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நரிக்குடி ஒன்றிய பொறுப்பாளரான இவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வீரசோழன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பம்பு ஆபரேட்டராகவும் பணிபுரிந்து வந்த இவரை திட்டமிட்டு சிலர் செல்போனில் அழைத்து வீட்டில் இருந்து வெளியே வரவழைத்து வெட்டி படுகொலை செய்தனர்.
இது தொடர்பாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த நாகராஜன்(24), லட்சுமணன்(21), முனீஸ்வர பாபு(23), சிவபாலன்(24), சம்பத்குமார்(21), பிரபாகரன்(23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.