ஆரணி கோவிலில் திருடப்பட்ட சிலை கிணற்றில் மீட்பு போலீசார் விசாரணை

ஆரணி சைதாபேட்டை அனந்தபுரம் பகுதியில் அனந்தபத்ம ஜெயின் கோவில் உள்ளது. நேற்று பகலில் அதே பகுதியை சேர்ந்த சாந்தாம்மா (வயது 75) என்பவர் கோவிலுக்கு சென்றார்.

Update: 2017-09-10 00:07 GMT

ஆரணி,

ஆரணி சைதாபேட்டை அனந்தபுரம் பகுதியில் அனந்தபத்ம ஜெயின் கோவில் உள்ளது. நேற்று பகலில் அதே பகுதியை சேர்ந்த சாந்தாம்மா (வயது 75) என்பவர் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்த பின்னர் கோவிலை சுற்றி வந்தார். அதற்குள் கோவிலில் இருந்த அரை அடி உயரம் உள்ள பார்சுவநாதர் சிலை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கோவில் நிர்வாகி சவுந்தர்ராஜன் மூலம் ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வந்த கோவில் நிர்வாகிகள் கோவில் முழுவதும் தேடிப்பார்த்தனர். அங்குள்ள கிணற்றில் இறங்கியும் சிலையை தேடும் பணியில் சிலர் ஈடுபட்டனர். அப்போது திருடப்பட்ட பார்சுவநாதர் சிலை கிணற்றுக்குள இருந்ததை அவர்கள் மீட்டனர். சிலையை வீசியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்