கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி ஜோதி கண் வங்கி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் சார்பில் கண்தான இருவார விழாவையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;
புதுச்சேரி,
புதுவை காமராஜர் சிலையில் அருகில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. அதனை வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்திற்கு டாக்டர் வனஜா வைத்தியநாதன் தலைமை தாங்கினார்.
இதில் ரோட்டரி ஆளுநர் ரமேஷ்பாபு, முன்னாள் ஆளுநர் மணி, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் தலைவர் வைத்தியநாதன், மாநில நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி குழந்தைசாமி, ஒருங்கிணைப்பாளர் சவுந்திரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் கடற்கரை காந்தி சிலையுடன் நிறைவு பெற்றது.