மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்டம் 14-ந் தேதி அடிக்கல் நாட்டு விழா
மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்ட அடிக்கல் நாட்டு விழா வருகிற 14-ந் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் அபே ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றனர்.
புதுடெல்லி,
நாட்டிலேயே முதன் முறையாக புல்லட் ரெயில் திட்டம் மராட்டிய மாநில தலைநகர் மும்பை- குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே செயல்படுத்தப்படுகிறது.
இந்த மாபெரும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) ஆமதாபாத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேயும் அடிக்கல் நாட்டுகின்றனர்.
சாதாரணமாக ஆமதாபாத்தில் இருந்து மும்பைக்கு ரெயிலில் வர 7 மணிநேரம் ஆகும். ஆனால், இந்த புல்லட் ரெயில் பயண நேரத்தை 4 மணிநேரம் குறைத்து, வெறும் 3 மணிநேரத்தில் மும்பையை வந்தடையும்.
மேலும், இந்த புல்லட் ரெயிலில் ஒரே நேரத்தில் 750 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த திட்டத்துக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. இதனை மத்திய அரசும், ஜப்பான் அரசும் சரிசமமாக ஏற்றுக்கொள்கின்றன.
மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தை வருகிற 2023-ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனினும், 2022-ம் ஆண்டுக்குள்ளேயே முடிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புல்லட் ரெயில் இரு மார்க்கத்திலும் தலா 12 ரெயில் நிலையங்களில் தலா 165 வினாடிகள் நின்று செல்லும். புல்லட் ரெயில் வழித்தடம் மும்பையில் பொய்சர் முதல் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் வரையில் 21 கிலோ மீட்டர் தூரம் சுரங்க மார்க்கமாக அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
புல்லட் ரெயில் திட்ட அடிக்கல் நாட்டு விழா நிறைவு பெற்றதும், முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில், ஜப்பான் நாட்டை சேர்ந்த வெளியுறவு வணிக அமைப்பு மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சி ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகளும், இந்திய பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.