பைகுல்லா விலங்கியல் பூங்காவில் ரூ.5 கோடி செலவில் 300 கண்காணிப்பு கேமராக்கள்
பைகுல்லா விலங்கியல் பூங்காவில் ரூ.5 கோடி செலவில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.
மும்பை,
கடந்த மாதத்தில் மட்டும் 76 ஆயிரத்து 944 பார்வையாளர்கள் வந்து உள்ளனர். ஏராளமானவர்கள் வந்து செல்லும் இந்த பூங்காவில் திருட்டு மற்றும் விரும்பத்தகாத செயல்கள் நடக்கின்றன.
பூங்காவில் காவல் பணியில் 70 காவலாளிகள் 3 ஷிப்டுகளாக பணியில் ஈடுபடுகிறார்கள்.
கடந்த 2015–ம் ஆண்டு இந்த பூங்காவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியே அங்குள்ள சிவாஜி சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த கவரிங் நகையை தங்கநகை என நினைத்து திருடினார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.இது போன்ற சம்பவங்களை தொடர்ந்து, மும்பை மாநகராட்சி ராணிபார்க் பூங்காவில் இரவு காட்சிகளையும் தெளிவாக படம் பிடிக்கும் வகையில் 300 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு முடிவு செய்து உள்ளது. இதற்காக ரூ.5 கோடி செலவிட திட்டமிடப்பட்டு உள்ளது.