ஜூகு கட்டிட தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு
ஜூகு கட்டிட தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.;
மும்பை,
ஜூகு கட்டிட தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
மும்பை வில்லேபார்லே ஜூகு காய்பி ஆஸ்மி பார்க் அருகே பிரார்த்தனா என்ற பெயரில் 13 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் அந்த கட்டிடத்தின் தரைதளத்தில் தகரத்தினால் ஆன கொட்டைகைகள் அமைத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உடல் கருகி பலியானார்கள்.தீக்காயங்களுடன் 18 பேர் சிகிச்சைக்காக கூப்பர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த தீ விபத்து சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததன் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து ஜூகு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில், படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த வில்லியம் டோப்பி என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதன் காரணமாக இந்த தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. இதற்கிடையே சம்பவம் தொடர்பாக போலீசார் கட்டுமான ஒப்பந்ததாரர் கிரண் பட்டேல், மேற்பார்வையாளர் பிரசாந்த் மோரே, என்ஜினீயர் சிஜூஜான் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.