அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

நாகப்பட்டினம்,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகை மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் 2017-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அண்ணா விரைவு சைக்கிள் போட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது. போட்டியை மாவட்ட உடற்கல்வி அலுவலர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 13 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் 4 முதல் 10-ம் இடம் வரை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.