தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை வெட்டிக்காட்டில் அதிகபட்சமாக 28 மி.மீ. பதிவானது

தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. வெட்டிக்காட்டில் அதிகபட்சமாக 28 மி.மீ. பதிவானது.;

Update: 2017-09-09 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப்பருவமழை பொய்த்து விட்டது. இதனால் கடும் வறட்சி நிலவி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஆங்காங்கே நிலவி வருகிறது. இந்த நிலையில் கோடைகாலம் முதல் அவ்வப்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வந்தது. சில நாட்கள் தொடர்ந்து வெயில் அடிப்பதும் பின்னர் மழை பெய்வதுமாக இருந்தது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று அதிகாலை முதலே தஞ்சை மாவட்டத்தில் லேசான தூறலுடன் மழை பெய்தது.

லேசான தூறல்

காலை 11 மணி வரை மழை லேசான தூறலுடன் காணப்பட்டது. அதன் பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. லேசான தூறலுடன் மழை பெய்ததால் நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் நனைந்து கொண்டும், குடைபிடித்தபடியும் சென்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கல்லணை 1.2, திருக்காட்டுப்பள்ளி 1, தஞ்சை 1.3, பாபநாசம் 21, கும்பகோணம் 16.2, அணைக்கரை 4, வெட்டிக்காடு 28.4, மதுக்கூர் 11.4, பட்டுக்கோட்டை 4. 

மேலும் செய்திகள்