திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 433 வழக்குகள் முடித்து வைப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த லோக் அதாலத்தில் 433 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.;
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் நடைபெற்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி டி.இளங்கோவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதிகள் பரிமளா, முருகேசன், சுஜாதா, தமிழ்ச்செல்வி, சுபாஷினி, செந்தில்பாபு, சரஸ்வதி, முகிழாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதே போல பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு , ஊத்துக்கோட்டை, திருத்தணி பகுதிகளிலும் லோக்அதாலத் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த லோக் அதாலத்தில் கோர்ட்டுகளில் நிலுவை மற்றும் நிலுவையில் அல்லாத குற்றவியல் சமாதான வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி வழக்குகள், குடும்பநல வழக்குகள், சிவில் வழக்குகள், நிலஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் என மொத்தம் 27 ஆயிரத்து 533 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்குகளில் 433 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.7 கோடியே 10 லட்சத்து 63 ஆயிரத்து 685-க்கு தீர்வு கணப்பட்டது. பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி டி.இளங்கோவன் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.