கரிம்பேடு, பேரண்டூர் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கரிம்பேடு ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.

Update: 2017-09-09 22:30 GMT
பள்ளிப்பட்டு,

தனி தாசில்தார் சாந்தி முன்னிலை வகித்தார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, திருமண உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாற்றம், நலத்திட்ட உதவிகள் கோரி 30 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீதி மனுக்கள் அனைத்தும் விசாரணைக்காக அந்தந்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் மதன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் விமல்சேகர், கிளை செயலாளர் சிட்டிபாபு, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஸ்வரி, நாகேந்திர நாயுடு, பரமசிவம் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. துணை தாசில்தார் கதிர்வேல் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர்கள் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் பச்சையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன்கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 90 பேர் தாசில்தார் கிருபாஉஷாவிடம் மனுக்கள் அளித்தனர்.
இதில் 8 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள 82 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்