பலத்த மழை எதிரொலி: நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் நொய்யல் ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு ஈரோடு மாவட்டம் வழியாக சென்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.;

Update: 2017-09-09 22:45 GMT

சென்னிமலை,

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் நொய்யல் ஆறு உற்பத்தி ஆகிறது. இந்த ஆறு ஈரோடு மாவட்டம் வழியாக சென்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையத்தில் நொய்யல் ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

ஐகோர்ட்டின் உத்தரவுபடி அணையில் வரும் தண்ணீர் படிப்படியாக நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 3 அடி மட்டுமே இருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருப்பூர் மாவட்ட பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கன அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 6 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 15 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்தது. இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் செய்திகள்