சென்னை திருவல்லிக்கேணியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை, 40 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை திருவல்லிக்கேணியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த பெண் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பழனியப்பன் 2-வது தெருவை சேர்ந்தவர் கலா(வயது 52). இவருடைய கணவர் துரை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவருடைய மூத்த மகன் கமல்(35) திருமணமாகி சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார். இளைய மகன் ஜெயக்குமாரும் (23) கமல் வீட்டிலேயே தங்கி உள்ளார்.
திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டில் கலா தனியாக இருந்து அப்பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். தனியாக வசிக்கும் தனது தாயார் கலாவிடம் செல்போனில் கமல் தினமும் பேசுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் மதியம் 2 மணிக்கு கலாவிடம் பேசுவதற்காக கமல் செல்போனில் அழைத்துள்ளார்.
இரவு வரையில் பலமுறை செல்போனில் அழைத்தும் கலா அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து திருவல்லிக்கேணியில் வசித்து வரும் உறவினர் பவானியை செல்போனில் அழைத்து, தனது தாயார் கலாவை வீட்டில் சென்று பார்த்து வருமாறு கமல் கூறினார். அதன்படி கலா வீட்டுக்கு பவானி சென்று பார்த்தார். வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. பவானி பலமுறை கதவை தட்டியும் கலா கதவை திறக்கஇல்லை.
இதுகுறித்து கமலுக்கு, பவானி தகவல் தெரிவித்தார். இதையடுத்து பதற்றத்துடன் கலா வீட்டுக்கு கமல் விரைந்து வந்தார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கமலுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய தாயார் கலா தலையில் ரத்தகாயத்துடனும், கழுத்தில் கீறல்களுடன் சமையல் அறையில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 10 பவுன் வளையல் உள்பட 40 பவுன் நகைகளும் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் கமல் புகார் அளித்தார். அதன்பேரில் அண்ணாசதுக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவல்லிக்கேணி கஸ்தூரிபா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை-கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கலா உடல் முழுவதும் நகைகளை அணிந்து இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததால், நகைக்காக திட்டமிட்டு இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் கலா வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால், கொடுக்கல்- வாங்கல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
அவரிடம் வட்டிக்கு பணம் பெற்றவர்கள் விவரங்களை சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.