காஞ்சி சங்கராச்சாரியார் 83-வது பிறந்த நாள் விழா ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாரின் 83-வது பிறந்தநாள் விழா நேற்று

Update: 2017-09-09 22:30 GMT
சென்னை,

சென்னை தியாகராயநகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார், விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்று சென்றனர்.

இந்த விழாவின் போது, ஜெயேந்திர வித்யாலயா பள்ளியில் படித்து ‘நீட்’ தேர்வு எழுதி மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. பின்னர், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு ஒரு ரூபாய்க்கு சிகிச்சை அளித்து சமூகத்தில் சேவை புரிந்து வரும் டாக்டர் ராமமூர்த்தி உள்ளிட்ட 9 சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்