பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயத்துக்கு நாராயணசாமி வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2017-09-08 23:50 GMT

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதையொட்டி நேற்று காலை மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் நமச்சிவாயம் குடும்பத்துடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் சித்தானந்த சாமி கோவிலில் நடந்த பூஜையில் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.

அதன்பின் அவருடைய குலதெய்வமான தட்டாஞ்சாவடி வீரபத்திரசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மணவெளியில் உள்ள முத்துமாரியம்மன்கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். பின்னர் அவர் தனது வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அங்கு தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு கேக் வெட்டினார்.

பிறந்தநாள் கொண்டாடிய அமைச்சர் நமச்சிவாயத்துக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம், வட்டார காங்கிரஸ் தலைவர் அயூப், தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் மலர்கண்ணன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர்கள் கன்னியப்பன், அருணாசலம், ஜீவதயாளன், பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள், சுப்ரீம் ரியல் எஸ்டேட் தயாளன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் முகுல்வாஸ்னிக் எம்.பி., த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறந்தநாளையொட்டி அமைச்சர் நமச்சிவாயம் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள், அன்னதாங்களை வழங்கினார். மேலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினார்.


மேலும் செய்திகள்