டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குடகிற்கு வருகையா?
தனியார் சொகுசு விடுதியில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குடகுக்கு வருகை தர இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
குடகு,
டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த மாதம் 22-ந் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் புதுச்சேரியில் உள்ள உள்ள ஒரு சொகுசு விடுதியில் டி.டி.வி. தினகரன் தங்க வைத்தார்.
டி.டி.வி.தினகரன் எதிர்பார்த்த அரசியல் மாற்றம் நிகழாததாலும், அவருக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் 2 முறை நோட்டீஸ் அனுப்பியதாலும் சொகுசு விடுதியில் தங்கி இருந்த எம்.எல்.ஏ.க்கள் சோர்வும், மனக்குழப்பமும் அடைந்தனர்.
இதற்கிடையே சொகுசு விடுதியில் தங்கியிருந்த சில எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதனால் அவர்கள் டி.டி.வி.தினகரனுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சொகுசு விடுதிக்கு திரும்பினர். எம்.எல்.ஏ.க்களின் கலக்கத்தை போக்க டி.டி.வி.தினகரனே புதுச்சேரிக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து பேசினார். இதற்கிடையே ஜக்கையன் எம்.எல்.ஏ. டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து பிரிந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கவர்னர் வித்யாசாகர் ராவை டி.டி.வி.தினகரன் சந்தித்து பேசினார். அப்போது அவர் கவர்னரிடம், மனு ஒன்றை அளித்தார். மேலும் அவர் கவர்னரிடம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. எனவே நம்பிக்கை தீர்மானத்தை கொண்டுவந்து பெரும்பான்மையை நிரூபிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதை ஏற்றுக்கொண்ட கவர்னர், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் தங்கியுள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் திடீரென்று கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி அருகே காவிரி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஒரு தனியார் சொகுசு விடுதிக்கு மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதற்காக அந்த விடுதியில் டி.டி.வி. தினகரன் சார்பில் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் 20 அறைகளை முன்பதிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து அறிந்த நிருபர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று மதியம் வரை டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் அந்த சொகுசு விடுதிக்கு வரவில்லை.
இதுகுறித்து அந்த விடுதி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “பெங்களூருவைச் சேர்ந்த ஒருவரால் 20 அறைகள் திடீரென முன்பதிவு செய்யப்பட்டது. அங்கு தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வந்து தங்குவதாக யாரும் கூறவில்லை. ஆனால் அவர்கள்தான் வர இருக்கிறார்கள் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென பெங்களூருவைச் சேர்ந்த அந்த நபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 20 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து விடுங்கள் என்று கூறிவிட்டார்” என்றார்.
இதற்கிடையே டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மைசூரு சாமுண்டிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நிலவும் பரபரப்பான இந்த அரசியல் சூழ்நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகத்துக்கு வந்து சொகுசு விடுதியில் தங்க இருப்பதாக வெளியான தகவல்கள் மேலும் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.