ராசிபுரம் அருகே, விபத்தில் 2 பேர் சாவு: பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனதால் உறவினர்கள் சாலைமறியல்
ராசிபுரம் அருகே, விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனதால் உறவினர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகே உள்ள பெரியூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65), விவசாயி. இவரது தங்கை பச்சாயியின் மகன் பூபதி (29). இவர் சந்திரசேகரபுரம் வடக்கு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர். சரக்கு வேன் டிரைவர். இவருக்கு கனகா (24) என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது.
புது மாப்பிள்ளையான பூபதியும், அவரது தாய் மாமன் வெங்கடாசலமும் நேற்று முன்தினம் இரவு பேளுக்குறிச்சி தாண்டாக்கவுண்டனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். பூபதி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். வெங்கடாசலம் மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் அமர்ந்திருந்தார்.
இவர்கள் புதிய பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் மீது பூபதி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பூபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வெங்கடாசலம் சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
விபத்தில் இறந்த வெங்கடாசலத்திற்கு நல்லம்மாள் (55) என்ற மனைவியும், சரவணன் (37), கிருஷ்ணமூர்த்தி (32) என்ற 2 மகன்களும், செல்வி (39), கோகிலா (35) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் செங்கோடன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விபத்தில் பலியான 2 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பகல் 3 மணிவரை விபத்தில் இறந்த வெங்கடாசலம் மற்றும் பூபதி ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய தேவையான ஆவணங்களை போலீசார் கொண்டுவராததால் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஆனது. விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். பிரேத பரிசோதனை செய்ய காலதாமதம் ஆனதையொட்டி ஆத்திரம் அடைந்த உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள மெயின் ரோட்டில் திடீரென்று சாலை மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் பேளுக்குறிச்சி போலீசார் பிரேத பரிசோதனைக்கான ஆவணங்களை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சமர்ப்பித்தனர். அதன்பிறகு வெங்கடாசலம் மற்றும் பூபதி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்த உறவினர்கள், நண்பர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.