கடலூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 20 சதவீதம் இடைக்கார நிவாரணம் வழங்க வேண்டும், சிறப்புகாலமுறை, தொகுப்பு மற்றும் மதிப்பு ஊதியங்களை ஒழித்துவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு(ஜாக்டோ-ஜியோ) நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டம் செய்தனர். இதில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தடையை மீறி நேற்று 2-வது நாளாக மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பெண்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளரும் ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான ஜீவானந்தம், ஜே.எஸ்.ஆர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ஜெகதீசன், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், அனைத்து ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் பெருஞ்சித்திரன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பழனி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.