மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்
மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில், ‘நீட்’ தேர்வை விலக்க கோரியும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற கோரியும்
சென்னை,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், ‘நீட்’ தேர்வு வேண்டாம் எனவும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, த.வெள்ளையன் பேசியதாவது:-
‘நீட்’ தேர்வு முறையால் இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த முடியாது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வணிகர்களால் தான் முடியும். ஒரே இந்தியா, ஒரே கல்விக் கொள்கை என்ற முடிவு தமிழகத்துக்கு எதிரானது. ‘நீட்’ தேர்வு மூலம் வடஇந்தியர்களே பெரிதும் பயன் அடைவார்கள். தமிழர்கள் மருத்துவ துறைக்குள் போக முடியாத நிலை ஏற்படும்.
‘நீட்’ தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்திய மாணவி அனிதா கடைசியில் உயிர் தியாகம் செய்துள்ளார். இது ஈழ தமிழர்களுக்காக முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தி தீக்குளித்ததற்கு இணையானது. ‘நீட்’ தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்துக்கே எதிரானது.
இவ்வாறு அவர் பேசினார்.