தமிழக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் 200 பேர் கைதாகி விடுதலை

மியான்மர் நாட்டில் முஸ்லிம்களை ராணுவம் படுகொலை செய்து வருவதை கண்டித்து தமிழக முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில்

Update: 2017-09-08 22:45 GMT
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள வாலாஜா பெரிய மசூதி அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவருமான தடா ரஹிம் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் தலைவர் அக்ரம் கான் முன்னிலை வகித்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாக செல்ல முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது மியான்மர் நாட்டு சிறப்பு ஆலோசகர் சூகியின் உருவப்படம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்