பல்லாவரம் அருகே விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே நாகல்கேணி செல்லும் திருநீர்மலை சாலையில் நேற்றுமுன்தினம் மாலை புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-09-08 23:15 GMT

தாம்பரம்,

அந்த பகுதியில் ஏற்கனவே இருந்த மதுக்கடை மூடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவிகள் பாதிக்கப்படுவதாக கூறி மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் தேவஅருள்பிரகாசம் தலைமையில் மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கட்சி நிர்வாகிகள் தமிழரசன், பொற்செழியன், இனியவளவன், தாம்பரம் சாமுவேல், ரஞ்சன் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திடீரென அவர்கள், மதுக்கடை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல்லாவரம்–திருநீர்மலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பல்லாவரம் போலீசார், அனைவரையும் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். மதுக்கடை முன் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்