நாங்குநேரி அருகே வி‌ஷம் குடித்தது கள்ளக்காதல் ஜோடி விசாரணையில் தகவல்

நாங்குநேரி அருகே காருக்குள் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த வாலிபரும், இளம்பெண்ணும் கள்ளக்காதல் ஜோடி என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Update: 2017-09-08 21:00 GMT
நாங்குநேரி,

நாங்குநேரி அருகே காருக்குள் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த வாலிபரும், இளம்பெண்ணும் கள்ளக்காதல் ஜோடி என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

வி‌ஷம் குடித்தனர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்தலை விலக்கு பகுதியில் நேற்று முன்தினம் மாலை காருக்குள் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். அவர்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வாலிபரும், இளம்பெண்ணும் மயங்கி கிடந்த காரை கைப்பற்றினர். மேலும் அவர்களின் செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதல் ஜோடி

விசாரணையில், காருக்குள் மயங்கி கிடந்த வாலிபர் குமரி மாவட்டம் களியக்காவிளை கல்வெட்டான்குழியை சேர்ந்த திலீப்குமார் (வயது 27) என்பதும், அந்த இளம்பெண் களியக்காவிளை அருகே உள்ள புலப்புரத்தை சேர்ந்த எட்வின்குமார் மனைவி லட்சுமி (30) என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பதும் தெரியவந்து உள்ளது. திலீப்குமார் டிப்ளமோ முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அவர் தற்போது ஊருக்கு வந்து உள்ளார். அவருக்கும், லட்சுமிக்கும் ஏற்கனவே கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. இந்த நிலையில் அவர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதற்கிடையே, பாளையங்கோட்டை ஆஸ்பத்திரியில் திலீப்குமாரும், லட்சுமியும் சிகிச்சை பெறுவது குறித்து தகவல் அறிந்த அவர்களது உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் திலீப்குமார், லட்சுமி இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்