நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர், வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-08 20:45 GMT

சங்கரன்கோவில்,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சங்கரன்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சங்கரன்கோவில் கோர்ட்டு முன்பு அட்வகேட் அசோசியேசன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கரேஸ்வரன் தலைமை தாங்கினார். கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், சுரேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அருண்பிரசாத், டேவிட்தாமஸ், செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி

சங்கரன்கோவில் தேரடி முன்பு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தென்மண்டல செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் கண்ணன், தங்கவேல், பசும்பொன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அய்யனார், சரவணன், கோபி, கோமதிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்