சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் 3,188 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 3 ஆயிரத்து 188 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின.
ஈரோடு,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் 7-ந் தேதி (நேற்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் நேற்று முன்தினம் ஈரோட்டில் நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டம் நடத்துவது என்றும், ஒத்தி வைப்பது என்றும் இருவேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. போராட்டம் ஒத்தி வைப்பது தொடர்பான கருத்தை தெரிவித்த நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. அதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் மட்டும் போராட்டத்தில் ஈடுபடாமல் பணிக்கு சென்றனர்.
ஈரோடு கலெக்டர் வளாகத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் ஆசிரியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டதால் பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் செயல்படவில்லை.
போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் நேற்று காலை திரண்டனர். அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சண்முகம், அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எழுந்து சென்று தாலுகா அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கச்சேரிரோட்டில் மறியல் செய்தனர். அவர்கள் சாலையில் அமர்ந்து தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் போட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேன், பஸ்களில் ஏற்றினார்கள்.
இதில் 212 பெண்கள் உள்பட 312 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் 2 ஆயிரத்து 273 பெண்கள் உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 188 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர்பாபு, போராட்டக்குழு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் கூறுகையில்,
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம், அரசு ஊழியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
ஜாக்டோ அமைப்பில் மொத்தம் 23 ஆசிரியர் சங்கத்தினர் உள்ளனர். இதில் 16 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி ஆகியன ஜாக்டோ அமைப்பில் இருந்து மாநில அளவில் விலகினாலும், அந்த கூட்டணிகளை சேர்ந்த ஆசிரியர்களும் போராட்டத்தில் பலர் பங்கேற்றனர்.
எனவே ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மொத்தம் 8 ஆயிரத்து 600 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர் என்றார்கள்.