‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம்
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். மேலும் வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும் ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு திட்டவட்டமாக உத்தரவிட்டது. இந்த நிலையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவ-மாணவிகள் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி மாணவ-மாணவிகள் கல்லூரியின் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி ஊர்வலமாக சென்றனர். கல்லூரியின் முன்பு தொடங்கிய ஊர்வலம் வீரப்பன்சத்திரம் வழியாக ஈரோடு பஸ் நிலையம் நோக்கி சத்திரோட்டில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது மாணவர்களும், மாணவிகளும் ‘நீட்’ தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.
மாணவ-மாணவிகள் ஊர்வலமாக செல்வது பற்றிய தகவல் அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், “நாங்கள் அமைதியான முறையில் ஊர்வலத்தை நடத்துகிறோம்” என்றனர். அதற்கு போலீசார் முதலில் அனுமதி மறுத்தாலும் பிறகு பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் சுவஸ்திக் கார்னர் பகுதியில் திரும்பி கல்லூரிக்கு செல்லும்படி கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட மாணவ-மாணவிகள் சுவஸ்திக் கார்னர் ரவுண்டானாவில் திரும்பி மீண்டும் சத்திரோடு, வீரப்பன்சத்திரம் வழியாக கல்லூரிக்கு சென்று ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.
ஈரோட்டில் மாணவ-மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஜல்லிக்கட்டுக்காக ஏற்கனவே போராட்டம் நடத்தப்பட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்திற்கு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், அங்கு பொதுமக்கள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. பூங்காவின் நுழைவு வாயில் கதவு அடைக்கப்பட்டது. இதனால் சுவஸ்திக் கார்னரில் இருந்து பூங்கா வழியாக பவானி ரோட்டிற்கு இருசக்கர வாகனங்களில் செல்ல முயன்றவர்கள் திரும்பி மாற்றுப்பாதையில் சென்றனர்.
இதேபோல் ஈரோடு காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம் ஆகிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.