டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ள பெரியகுளம் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் கடிதம்
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமுவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் போலீசில் புகார் செய்ததன் பேரில் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் கதிர்காமு. இவர் தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்து உள்ளார். இவருடைய வீடு தேனி ஸ்ரீராம்நகரில் உள்ளது. இந்த வீட்டுக்கு கடந்த மாதம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கதிர்காமு எம்.எல்.ஏ. வீட்டுக்கு நேற்று முன்தினம் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை அவருடைய குடும்பத்தினர் படித்தனர். கடிதத்தை படித்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆட்சிக்கு ஆதரவு
அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீங்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இல்லையெனில், நீயும் உன் குடும்பத்தினரும் உயிரோடு இருக்க முடியாது. ஓட்டெடுப்புக்கு தயாராக நீங்கள் அனைவரும் இருக்க வேண்டும். அவன் கூப்பிட்டான், இவன் கூப்பிட்டான் என்று தாவுனீர்கள் என்றால், உங்கள் ஊரில் வைத்தே மனைவி, பிள்ளைகளை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவோம். எச்சரிக்கை! நீங்கள் அனைவரும், மாவட்ட, ஒன்றிய செயலாளர்களையும் கூட்டிக் கொண்டு வர வேண்டும். 12-ந்தேதி தினகரன் குடும்பத்தை தூக்குகிறோம். இதுதான் இறுதி முடிவு. ஆளுக்கு ரூ.10 கோடி கொடுக்க இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையடுத்து கதிர்காமு எம்.எல்.ஏ.வின் மகன் அசோக்குமார் தேனி போலீஸ் நிலையத்தில் சென்று இதுதொடர்பாக ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகாரில், ‘கொலை மிரட்டல் கடிதம் விடுத்தவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது எங்கள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இதையடுத்து கதிர்காமு எம்.எல்.ஏ. வீட்டுக்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கதிர்காமு எம்.எல்.ஏ. வீட்டுக்கு வந்த கடிதத்தில், ‘தினகரன் குடும்பத்தை 12-ந்தேதி தூக்குவோம்’ என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது. டி.டி.வி.தினகரனுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், இது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே இந்த கடிதம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து அனுப்பப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கிரீன்வேஸ் சாலையில் தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளது. எனவே உண்மையில் மிரட்டலுக்காக அனுப்பப்பட்ட கடிதமா? அல்லது அரசியலில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று யாரேனும் அனுப்பிய கடிதமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடிதம் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்தும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.