அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் மறியலில் ஈடுபட்ட 1480 பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருபிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். 8 இடங்களில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 1480 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனையொட்டி இந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஈரோட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியின் பேரில் இந்த அமைப்பின் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். ஆனால் சுப்பிரமணியன் மற்றும் மாயவன் தலைமையிலான பிரிவினர் ஏற்கனவே அறிவித்தபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் 17 சதவீதம் பேர் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 250 ஆசிரியர்களில் 750 பேரும், 16 ஆயிரத்து 500 அரசு ஊழியர்களில் 3900 பேரும் ஆக மொத்தம் 4650 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதிய ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் ஆகிய 8 இடங்களில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 970 பெண்கள் உள்பட 1480 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 118 பள்ளிகளும் செயல்பட்டன. இதில் பணிபுரியும் 432 ஆசிரியர்களில் 10 இடைநிலை ஆசிரியர்களும் 15 பட்டதாரி ஆசிரியர்களும் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்வதாகத் தெரிவித்து பள்ளிக்குச் செல்லவில்லை என்று உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சீனிவாசன் கூறினார்.
வத்திராயிருப்பு ஒன்றியத்தில் 37 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும், 27 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இதில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மட்டும் செயல்படவில்லை. மேலும் சரகத்தில் உள்ள 276 ஆசிரியர்களில் 70 ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியர்களும் 4 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்து பள்ளிக்குச் செல்லவில்லை என்று உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மலர்கொடி கூறினார்.
வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. மறியலில் கலந்து கொண்ட 187 பெண்கள் 21 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். வெம்பக்கோட்டை தாலுகா அலுவலர்கள்,
வெம்பக்கோட்டை யூனியன் அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் வெம்பக்கோட்டை தாலுகா வருவாய் ஆய்வாளர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆலங்குளம் அரசு மேல் நிலை பள்ளியில் 3 ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொண்டனர்.