தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைகளுக்கான இலவச சட்ட உதவி மையம்
ராமநாதபுரத்தில் திருநங்கைகளுக்கான இலவச சட்ட உதவி மையத்தினை மாவட்ட நீதிபதி கயல்விழி தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திலேயே முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் திருநங்கைகளுக்கான இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுஉள்ளது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக நுழைவு பகுதியில் அமைந்துள்ள இந்த இலவச சட்ட உதவி மையத்தினை மாவட்ட நீதிபதி கயல்விழி தொடங்கி வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப்-கோர்ட்டு நீதிபதி சொர்ணகுமார் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுக்கான இலவச சட்ட உதவி மையத்தினை திறந்து வைத்து மாவட்ட நீதிபதி கயல்விழி பேசியதாவது:- தமிழகத்திலேயே முதல்முறையாக ராமநாதபுரத்தில் திருநங்கைகளுக்காக தனியாக இலவச சட்ட உதவிமையம் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த மையத்தில் திருநங்கைகள் 4 பேர் சட்ட உதவி ஆர்வலர்களாக நியமிக்கப்பட்டுஉள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் தங்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் குறித்து இந்த மையத்தில் மனு கொடுத்தால் அந்த மனுக்களை சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.
திருநங்கைகள் தங்களின் பிரச்சினைகளை எடுத்துச்சொல்வதற்கும், தீர்வு காண்பதற்கும் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில் திருநங்கைகளாலேயே கோரிக்கைகள் கேட்கப்பட்டு தீர்த்து வைக்க வழிவகை செய்யப்பட்டுஉள்ளது.
வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை இந்த மையம் செயல்படும். இந்த மையத்தின் மூலம் திருநங்கைகளுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கும் கவுன்சிலிங் ஏற்பாடு செய்து உதவ நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், திருநங்கைகளுக்கான அரசின் நலத்திட்டங்களை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்து திருநங்கைகளுக்கான சட்ட உதவி மைய சட்ட உதவி ஆர்வலர்களுக்கான நியமன ஆணையை மாவட்ட நீதிபதி கயல்விழி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.