முன்னாள் ஆசிரியைக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய 8–ம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு

நவிமும்பையை சேர்ந்த பெண் பன்ச்கானி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு அவர் வேலையில் இருந்து நின்று விட்டார்.

Update: 2017-09-07 22:09 GMT

மும்பை,

நவிமும்பையை சேர்ந்த பெண் பன்ச்கானி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார். சமீபத்தில் 8–ம் வகுப்பு படித்து வரும் அவரது முன்னாள் மாணவர் ஒருவர் பெண்ணை சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்டார். முன்னாள் ஆசிரியையும் தன்னிடம் படித்த மாணவர் தானே என நினைத்து அவரிடம் பேசினார். இந்தநிலையில் அந்த மாணவர் முன்னாள் ஆசிரியையிடம் அவரது படத்தை அனுப்புமாறு கூறினார். ஆனால் அவர் மாணவனுக்கு தனது படத்தை அனுப்ப மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் முன்னாள் ஆசிரியைக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பினார். மேலும் அவரை பற்றி அவதூறாக பேசினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முன்னாள் ஆசிரியை இது குறித்து காமோதே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் 8–ம் வகுப்பு மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்