கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் கைதான 5 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிப்பு
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் கைதான 5 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உடைய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான 4 பேருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட காவலாளி ஓம்பகதூர் அணிந்திருந்த உடை மற்றும் குற்றவாளிகள் அணிந்திருந்த உடை, கையுறை, தொப்பி உள்ளிட்டவைகளில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை தடயவியல் துறை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு ரத்த பரிசோதனை முடிந்ததை தொடர்ந்து அதற்கான அறிக்கை கோத்தகிரி கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த வழக்கில் கைதானவர் களுக்கும், ரத்த பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள ரத்த மாதிரி முடிவுகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை அறிய போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் கேரள மாநிலம் மஞ்சேரி சிறையில் இருக்கும் ஜம்ஷிர் அலி கோத்தகிரி வரவழைக்கப்பட்டார். இங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அவை சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளுடன் ஒத்து போகிறதா? என்று ஆய்வு நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கோவை சிறையில் இருக்கும் வாளையார் மனோஜ் சாமியார், திபு, தினேசன், உதயகுமார், குட்டிபிஜின் ஆகிய 5 பேருக்கும் ரத்த மாதிரி சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கோவைக்கு சென்று அங்கு சிறையில் இருந்து 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் கோத்தகிரிக்கு நேற்று மதியம் அழைத்து வரப் பட்டனர்.
அவர்களை கோத்தகிரி மாஜிஸ்திரேட் ஸ்ரீதர் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அதன்பிறகு 5 பேரையும் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் 5 பேரிடமும் இருந்து ரத்த மாதிரிகளை டாக்டர்கள் சேகரித்தனர். கைதிகளின் ரத்த மாதிரிகள் சென்னை தடயவியல் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு கொலை நடந்த இடத்தில் பதிவான ரத்த மாதிரிகளுடன் இவர்கள் ரத்த மாதிரி ஒத்து போகிறதா, என்று ஆய்வு நடத்தப்படும். அதன்பிறகு இந்த வழக்கில் முழு விவரம் தெரிய வரும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரத்த மாதிரி எடுக்கப்பட்ட பிறகு 5 கைதிகளும் பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு கொண்டு செல்லப் பட்டனர்.