நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

கரூர்,
‘நீட்’ தேர்வால் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காததால் அரியலூர் மாவட்டம் செந்துறை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கரூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் கடந்த 5-ந் தேதி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா சாவிற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக கல்லூரியில் மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லூரி நுழைவு வாயில் அருகே அமர்ந்து ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர்.