கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்; சாலை மறியல்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆயிரத்து 815 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப் பூதியம், மதிப்பூதியம் முறைகளை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கரூர் தாலுகா அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வதுரை, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஊர்வலமாக கரூர் பஸ் நிலையம் வரை சென்று பஸ் நிலையம் அருகே கோவை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கரூர் டவுன் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
குளித்தலை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஆசிரியர் சங்க பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் குளித்தலை தாலுகா அலுவலகம் முன்பு திருச்சி- கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து பெண்கள், ஆண்களை தனித்தனியாக திருமண மண்டபங்களில் தங்கவைத்தனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடவூர் ஒன்றியத்தில் ஜாக்டோ பொறுப்பாளர் குருமூர்த்தி, ஜியோ பொறுப் பாளர் பிரேம், ஊரக வளர்ச்சி துறை பொறுப்பாளர் சீரங்கன் ஆகியோர் முன்னிலையில் கடவூர் தாலுகா அலுவலகம் அருகே கரூர்- மணப்பாறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சிந்தாமணிபட்டி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து தரகம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் கரூர்- மணப்பாறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் கிருஷ்ணராய புரம், அரவக்குறிச்சி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆயிரத்து 332 பெண்கள், 483 ஆண்கள் என மொத்தம் ஆயிரத்து 815 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனை வரும் மாலை விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.