தளவாய்பட்டியில் பஸ் சிறைபிடிப்பு

தளவாய்பட்டியில் பஸ் சிறைபிடிப்பு;

Update: 2017-09-07 22:30 GMT
ஓமலூர்,

சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ் ஒன்று வந்தது. ஓமலூரில் சில பயணிகள் அந்த பஸ்சில் ஏறி தளவாய்பட்டி செல்ல டிக்கெட் கேட்டனர். ஆனால் தளவாய்பட்டியில் பஸ் நிற்காது என கூறி கண்டக்டர் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பயணிகளை தீவட்டிப்பட்டியில் இறக்கிவிட்டு விட்டு சென்றதாக தெரிகிறது.

இதனையடுத்து நேற்று காலை தர்மபுரியில் இருந்து சேலம் வந்த அந்த பஸ்சை தளவாய்பட்டியில் பொதுமக்கள் சிறை பிடித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார், அந்த தனியார் பஸ் டிரைவர், மற்றும் கண்டக்டர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து இனி பஸ் நிற்காமல் சென்றால் வழக்கு போடப்படும் என போலீசார் எச்சரித்தனர். இதனால் தர்மபுரி-சேலம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்