பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
சோமனூரில் பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்த 5 பேரின் உறவினர்கள் கூடுதல் நிவாரண நிதி வழங்க கோரி;
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கேரிக்கை விடுத்தனர்.
கோவையை அடுத்த சோமனூரில் நேற்று பஸ் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
நேற்று மாலை இறந்தவர்களின் உடலை வாங்குவதற்காக அவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். அப்போது இறந்தவர்களின் உறவினர்கள் முதல்-அமைச்சர் அறிவித்து உள்ள நிவாரண நிதி போதாது, கூடுதல் நிதி வழங்க வேண்டும். எனவே இறந்தவர்களின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், ஆர்.டி.ஓ. மதுராந்தகி மற்றும் போலீஸ் அதிகாரிகள் போ ராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கூறியதாவது:-
இந்த விபத்தில் இறந்த ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் உள்ளது. மேலும் கல்லூரி மாணவி ஒருவரும் இறந்து உள்ளார். தற்போது முதல்-அமைச்சர் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்து உள்ளார். இந்த நிவாரண தொகை போதாது, அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருதி கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயத்துக்கு ரூ.25 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான தொகையாகும்.
எனவே இவர்களுக்கும் கூடுதல் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் இறந்த பெண்ணின் இரு குழந்தைகளின் கல்வி செலவையும் அரசு ஏற்க முன்வர வேண்டும். இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது அதிகாரிகள் உங்களது கோரிக்கை குறித்து மனுவாக எழுதி கொடுங்கள் அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினர். ஆனால் இதற்கு உறவினர்கள் உடன்படவில்லை. மேலும் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தினர். உறவினர்களின் போராட்டம் காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். முன்னதாக காயம் அடைந்தவர்களை சந்தித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆறுதல் கூறினார். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த தாரணி, துளசி, கண்டக்டர் சிவக்குமார் ஆகியோரின் உறவினர்கள் அவர்களின் உடலை வாங்க சம்மதித்தனர். மற்ற 2 பேரின் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது.