நடமாடும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள்!

கண்ணாடி முன் நின்று கொண்டு, தனக்குத் தானே வெகு வேகமாக ஓவியம் தீட்டுவது அர்ஜெனிஸை பிரபலமாக மாற்றியிருக்கிறது.

Update: 2017-09-08 06:30 GMT
லிபோர்னியாவைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர் அர்ஜெனிஸ் பைனல். இன்று காமிக் புத்தக ஓவியங்களில் புகழ்பெற்றவராக விளங்குகிறார். காமிக் புத்தகங்களில் வரும் சூப்பர் ஹீரோக்கள், வில்லன்கள், பெண் கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் அச்சு அசலாகத் தன் உடல் ஓவியத்தில் கொண்டு வந்துவிடுகிறார். கண்ணாடி முன் நின்று கொண்டு, தனக்குத் தானே வெகு வேகமாக ஓவியம் தீட்டுவது அர்ஜெனிஸை பிரபலமாக மாற்றியிருக்கிறது. 

சாதாரண மனிதனான அர்ஜெனிஸ், ஒரு சில மணி நேரங்களில் முழு கார்ட்டூன் கதாபாத்திரமாக விஸ்வரூபம் எடுத்துவிடுகிறார். இவருடைய கார்ட்டூன் ஓவியங்களுக்கு உலகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

மேலும் செய்திகள்