மும்பையில் குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு புகார் மந்திரி மீது லோக் அயுக்தா விசாரணை
மும்பையில் குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு புகாரில் சிக்கிய மந்திரி பிரகாஷ் மேத்தா மீது லோக்அயுக்தா விசாரணைக்கு கவர்னர் அனுமதி அளித்தார்.
மும்பை,
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவர் பிரகாஷ் மேத்தா. மராட்டிய வீட்டுவசதி துறை மந்திரியாக உள்ளார்.
மந்திரி பிரகாஷ் மேத்தா தெற்கு மும்பை தார்டுதேவ் பகுதியில் உள்ள எம்.பி.மில்ஸ் காம்பவுண்டு குடிசை சீரமைப்பு திட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகவும், இதனால் ரூ.500 கோடி வரை ஊழல் புரிந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த பிரச்சினை ஓய்வதற்குள் குடிசை சீரமைப்பு திட்ட பயனாளிகளின் பட்டியலில் மந்திரி பிரகாஷ் மேத்தாவின் மகன் பெயரும், உறவினர்களின் பெயரும் இடம் பெற்றிருப்பதாக மற்றொரு புகாரும் எழுந்தது. அடுத்தடுத்த இந்த புகார்கள் கடந்த சட்டசபை கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. அவரை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டன.
இதனால் பா.ஜனதா கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “எம்.பி.மில்ஸ் காம்பவுண்டு பிரச்சினையை தோண்ட, தோண்ட ஏராளமான எலும்புக்கூடுகள் (சிக்கல்கள்) வெளிப்படுகின்றன. எனவே வீட்டு வசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகள் பற்றியும் லோக் அயுக்தா விசாரணைக்கு உத்தரவிடப்படும்” என தெரிவித்தார்.
மேலும் இதற்கு அனுமதி அளிக்குமாறு கவர்னருக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில், “நான் இரு அவைகளிலும் மந்திரி பிரகாஷ் மேத்தா மீது லோக் அயுக்தா விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளேன். தற்போது அனைத்து சூழ்நிலைகளும் அவருக்கு எதிராக உள்ளது. எனவே அவர்மீது லோக் அயுக்தா விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட கவர்னர் வித்யாசாகர் ராவ், மந்திரி பிரகாஷ் மேத்தா மீது லோக்அயுக்தா தனது விசாரணையை தொடங்க நேற்று அனுமதி அளித்தார். அதாவது ‘மராட்டிய லோக் அயுக்தா மற்றும் உப லோக் அயுக்தா சட்டம்-1977’-ன் 17(4) பிரிவின் கீழ் மந்திரி பிரகாஷ் மேத்தா மீதான லோக் அயுக்தா விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தகவலை கவர்னர் மாளிகை செய்தி தொடர்பு அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
இதற்கிடையே மந்திரி பிரகாஷ் மேத்தா மீது லோக்அயுக்தா விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தன்னை பாதுகாத்து கொள்ள முயற்சித்து இருக்கிறார் என்று எதிர்க்கட்சியினர் ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தனர். லோக்அயுக்தா விசாரணை வரம்புக்குள் முதல்-மந்திரி வரமாட்டார் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.