குமரி மாவட்டத்தில் ‘நீலத்திமிங்கலம்’ விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
குமரி மாவட்டத்தில், ‘நீலத்திமிங்கலம்’ விளையாட்டால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என புதிய போலீஸ் சூப்பிரண்டு துரை தெரிவித்தார்.
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த தர்மராஜன் கோவை மாநகர தலைமையிட துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணியாற்றிய துரை, குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின்னர், போலீஸ் சூப்பிரண்டு துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குமரி மாவட்டத்தில், பல்வேறு நடைமுறைகளை போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் சிறப்பான முறையில் செயல்படுத்தி உள்ளார். அந்த பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் சட்டம்– ஒழுங்கு பிரச்சினை, ரவுடியிசம் மற்றும் குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி சாலையில் வாகனங்கள் ஓட்ட வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிகபாரம் ஏற்றுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ‘நீலத்திமிங்கலம்’விளையாட்டால் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
திருட்டு மற்றும் குற்ற வழக்குகளில் காவல் துறையினர் விரைந்து செயல்பட அறிவுறுத்தப்படுவர். குமரி மாவட்டத்தில், எவ்வித குற்றச்செயலுக்கும் இடம் அளிக்காத வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் இருக்கும்.
காவல்துறை சார்ந்த எந்தவிதமான பிரச்சினைக்கும் என்னை(போலீஸ் சூப்பிரண்டு துரை) பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு துரை, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர். குமரி மாவட்டத்தின் 49–வது போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார். இவர் 2009–ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்றவர். பின்னர், நெல்லையில் பயிற்சி போலீஸ் சூப்பிரண்டாகவும், கடலூர் மாவட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், தூத்துக்குடி, சிவகங்கை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றி உள்ளார்.
போலீஸ்சூப்பிரண்டு துரையை, உதவி போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீஅபினவ், சாய்சரண்தேஜஸ்வி மற்றும் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.